Showing posts with label Kavidhai. Show all posts
Showing posts with label Kavidhai. Show all posts

Monday, January 16, 2012

மணித்துளிகள்...

வெளிநாட்டுப் பயணமும் வெளிநாட்டில் தொழிலும்
மணித்துளிகள் என்று எண்ணி வந்தேன்...

ஆனால் அவை வெறும் துளி மணிகள் தான்
என்று தெரிந்துக்கொண்டேன்...

பவழங்களும் முத்துக்களும் அங்கே கொட்டிக்கிடக்க
வெறும் பாசி மணிகளை பொருக்கவா இங்கு வந்தேன்?

என் மணித்துளிகளைக் காண
ஒவ்வொரு மணித்துளிகளையும் மணி மணியாய்க் கழிக்கின்றேன்...

Thursday, January 27, 2011

அந்த ஏழு நாட்கள்

நான் அவளை கண்டதும் வெளி வந்தது ஒரு ஞாயிறு

திங்கள் ஒருமுறை அவளை கண்டேன்

செவ்வாய் கிரகம் வரை சென்றேன் அவளை காண்பதற்கு

புதன் வந்தது என்னை சோகத்தில் ஆழ்த்த

வியாழனன்று சென்றாள் அவனிடம்

வெள்ளியன்று வேண்டினேன் இறைவா என் சனி ஒழியுமாயென்று

என் ஞாயிறை நான் திரும்பப் பார்ப்பேனா

என் எண்ணங்களின் எண்ணிக்கை

ஒரு முறை உன்னை பார்த்ததும் என் உயிர் ஒன்றை பறிகொடுத்தேன்

உன் இரு விழி சொல்கிறது நம் இரு இதயம் ஒன்று சேருமென்று

மூன்று
வார்த்தைகளுக்காக காத்திருக்கிறேன் வேறு மூன்று வார்த்தையால் என்னை கொன்று விடாதே

இவை வெறும் நான்கு வார்த்தைகள் என்று எண்ணாதே
நான்கு முறை சிந்தித்துப்பார்

ஐந்து
நிமிடங்கள் ஆனதடி என் ஐம்புலனும் துடிக்குதடி

ஆறு
மாதம் காத்திருந்த என்னை ஆறு வினாடியில் ஏமாற்றிவிடாதே

ஏழேழு
ஜென்மம் எடுத்தாலும் கிடைக்காது இந்த ஏழையின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்

எட்டி நின்று எதிர்பார்க்கும் இது எட்டு போடும் பரிட்சை அல்ல

ஒன்பது
வரை எண்ணுகிறேன்

பத்து
எண்பதுற்குள் என் உயிரை எனக்குத் தந்துவிடு

ஓட வாழ்வு

ஓ என்று ஓசைவிட்டு ஓடிச்சென்ற ஓடம்
ஓசையின்றி ஓட்டமின்றி ஒதுங்கி நிற்குதே

கள்வன் அந்த பாறை மீது மோதியதாலோ
அல்ல பயணம் செய்த பயணிகளின் பாரத்தினாலோ
இந்த வேக வாழ்க்கை சோகமாகி முடங்கிவிட்டதே

பயணம் செய்த பயணிகளோ அதை எண்ணவுமில்லை
இந்த ஓடத்தின் பாரம் கூட குறையவுமில்லை

சில மனிதர்களும் இவ்வோடவாழ்க்கை வாழ்கிறார்களே
தன் பிள்ளைகளும் இப்பயணிகள் போல எண்ணுகிறார்களே

பழுதடைந்த ஓடம் சேற பலக்கரைகளும் உண்டு
இப்பாசமுள்ள பெரியோர் வாழ முதியோர் இல்லங்களும் உண்டு

பெற்றோர் பலரின் பாரம் படிய
சிறியோர் சிலரின் சிந்தனை சிறக்கட்டும்.

வந்து வந்து போகும்

இரவும் பகலும் வந்து வந்து போகும்
மழையும் வெயிலும் வந்து வந்து போகும்
அம்மாவசையும் பௌர்ணமியும் வந்து வந்து போகும்

இன்பமும் துன்பமும் வந்து வந்து போகும்
மெய்யும் பொய்யும் வந்து வந்து போகும்
புதுமையும் பழமையும் வந்து வந்து போகும்

புகழ்ச்சியும் இகழ்ச்சியும் வந்து வந்து போகும்
வெற்றியும் தோல்வியும் வந்து வந்து போகும்
வரவும் செலவும் வந்து வந்து போகும்

இது போல் பலவும் வந்து வந்து போகும்....

உயிர் ஒன்று தான் கண்ணே வரும்.. ஆனால் போனால் வராது
ஆகையால் என் உயிரே, நீ இருக்கும் வரை
நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் ரசிப்போம்
துன்பங்களை அகற்றி இன்பங்களை பெருகுவிப்போம்....

இன்ப நேரங்களில் துன்பம் தரும்
துன்ப நேரங்களில் இன்பம் தரும்
ஒரு வரி "இத்தருணம் நிரந்தரமில்லை" என்பதுதான்....