ஓ என்று ஓசைவிட்டு ஓடிச்சென்ற ஓடம்
ஓசையின்றி ஓட்டமின்றி ஒதுங்கி நிற்குதே
கள்வன் அந்த பாறை மீது மோதியதாலோ
அல்ல பயணம் செய்த பயணிகளின் பாரத்தினாலோ
இந்த வேக வாழ்க்கை சோகமாகி முடங்கிவிட்டதே
பயணம் செய்த பயணிகளோ அதை எண்ணவுமில்லை
இந்த ஓடத்தின் பாரம் கூட குறையவுமில்லை
சில மனிதர்களும் இவ்வோடவாழ்க்கை வாழ்கிறார்களே
தன் பிள்ளைகளும் இப்பயணிகள் போல எண்ணுகிறார்களே
பழுதடைந்த ஓடம் சேற பலக்கரைகளும் உண்டு
இப்பாசமுள்ள பெரியோர் வாழ முதியோர் இல்லங்களும் உண்டு
பெற்றோர் பலரின் பாரம் படிய
சிறியோர் சிலரின் சிந்தனை சிறக்கட்டும்.
படகு துடுப்பின் துணையோடு இக்கரையில் இருந்து அக்கரை சேர்ந்தவுடன் ,
ReplyDeleteசுமந்து வந்த பாரம் குறைந்தது . ஆனால் அதனை தனிமை சூழ்ந்தது .
ஆயினும் ஒழுங்காக கரை சேர்த்த நிம்மதியுடன் இருந்தன ... படகும் துடுப்பும் .
படகு -- கணவன்
துடுப்பு -- மனைவி
பாரம் -- பிள்ளைகள்