இரவும் பகலும் வந்து வந்து போகும்
மழையும் வெயிலும் வந்து வந்து போகும்
அம்மாவசையும் பௌர்ணமியும் வந்து வந்து போகும்
இன்பமும் துன்பமும் வந்து வந்து போகும்
மெய்யும் பொய்யும் வந்து வந்து போகும்
புதுமையும் பழமையும் வந்து வந்து போகும்
புகழ்ச்சியும் இகழ்ச்சியும் வந்து வந்து போகும்
வெற்றியும் தோல்வியும் வந்து வந்து போகும்
வரவும் செலவும் வந்து வந்து போகும்
இது போல் பலவும் வந்து வந்து போகும்....
உயிர் ஒன்று தான் கண்ணே வரும்.. ஆனால் போனால் வராது
ஆகையால் என் உயிரே, நீ இருக்கும் வரை
நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் ரசிப்போம்
துன்பங்களை அகற்றி இன்பங்களை பெருகுவிப்போம்....
இன்ப நேரங்களில் துன்பம் தரும்
துன்ப நேரங்களில் இன்பம் தரும்
ஒரு வரி "இத்தருணம் நிரந்தரமில்லை" என்பதுதான்....
Last 3 lines are factual. very nice poem.
ReplyDeleteஉனக்கென ஒருவள் வந்த பின்
கர்வம் வந்தால் என்ன சோகம் போனால் என்ன
அவள் நினைவில் உன்னைத் துலைத்தப் பின்
வெற்றி வந்தால் என்ன தோல்வி போனால் என்ன
ஈருயிர் ஓருயிராய் ஆன பின்
நேர்மை வந்தால் என்ன ஒளிவு போனால் என்ன
இரவும் பகலும் அவள் நினைவான பின்
சூரியன் வந்தால் என்ன நிலவு போனால் என்ன
நினைத்தவளையே கைபிடித்த பின்
முதுமை வந்தால் என்ன இளமை போனால் என்ன
இனி இன்பம் இன்பம் இன்பம் மட்டும்மென்ற பின்
வாழ்வது பூமியில் இருந்தால் என்ன நிலவில் இருந்தால் என்ன
சுகமான வாழ்வு என்றும் நிரந்தரம்
__________________
நல்ல அருமையான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி
ReplyDeleteWhich room? I mean room போட்டு யோசிச்சு எழுதிற்க. அதான் எந்த room-ன்னு கேட்டன்.
ReplyDeleteJust tried to give Feedback in poem style for a very good poem... its all IL style.
ReplyDeleteThanks for your appreciation.